மாமன்னன் முதலாம் ராசேந்திரச் சோழன்



          இந்தியாவை ஆண்ட மன்னர்களில், தமிழ் மன்னர்களுக்குத் தனிப் பெருமை உண்டு. இந்தியாவைத் தாண்டிய நாடுகளையும் வென்றுத் தங்களது செங்கோலின் கீழ் கொண்டு வந்தவர்கள். அதிலும் ராசேந்திரச் சோழன் பராக்கிரமம் அதிகம் மிக்கவர் என்று அறிய முடிகிறது. அவரது கப்பற்படை வலிமை மிக்கதாக விளங்கி இருக்கிறது. அதனைக் கொண்டு பல தீவுகளையும், இலங்கை முழுவதையும் வென்ற அவர் கங்கைச் சமவெளி வரை தனது தீரத்தை நிலை நிறுத்தி இருக்கிறார். இம்மன்னரது தளபதியாக இருந்த அரையன் ராஜாதிராஜன் என்பவரதுப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் பல மன்னர்களது உறக்கம் கெடும் எனப் படித்தது உண்டு.

       அவரைப் பற்றி திரு அகிலன் அவர்களால் எழுதப்பட்ட “வேங்கையின் மைந்தன்” நாவல் சாகித்திய அகாதெமியின் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப் பட்டிருக்கிறது. வேங்கை எனக் குறிப்பிடப்படுபவர் மாமன்னன் ராஜராஜ சோழன். ராசேந்திரச் சோழன் கங்கை வரைப் படை எடுத்த சம காலத்தில், வட இந்தியாவை ஆக்கிரமித்த முகலாய மன்னனும் (முகம்மது கோரி?), ராசேந்திரச் சோழனும் போர்க்களத்தில் சந்தித்திருந்தால், இந்தியாவின் வரலாற்றில் முகலாயர்களுக்கு இடம் இல்லாமல் போயிருந்திருக்கலாம் என்பது பல வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து. ஏனோ அவ்வாறு நிகழ வில்லை.
 
சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்குச் சென்றிருந்தோம். அதன் தாக்கம்தான் இந்தப் பதிவு.

கங்கை கொண்ட சோழபுரம்
     

  கங்கை வரைப் படை எடுத்து வெற்றி கொண்ட மன்னர் ராஜெந்திரச்
சோழன்  அந்த வெற்றியின் காரணமாக எடுப்பித்த நகர்தான் கங்கை கொண்ட சோழபுரம். அருகில் நிர்மாணிக்கப் பட்ட ஏரி சோழ கங்கம். தனது தலைநகரைத்  தஞ்சாவூரிலிருந்து, இந்த நகருக்கு மாற்றினார். தனது தந்தையின் மீது அளவு கடந்த மரியாதைக் கொண்டிருந்த ராஜேந்திரச் சோழன் தனது 50 வயதிற்கு மேல்தான் அரியணை ஏறினார் என்பது போற்றத் தகுந்தது. தான் எழுப்பிய பிரகதீஸ்வரர் ஆலயம், உயரத்திலும், அளவிலும் தனது தந்தை எழுப்பியத் தஞ்சைப் பெரியக் கோவிலை விட சற்று சிறியதாக இருக்குமாறு அமைத்து இருக்கிறார்.

ஈசன் உறையும் இடம்


   இந்த ஆலயத்தின் மூலவருக்கு அபிஷேகம் செய்வதற்கென, சிங்கமுகத்துடன் நுழைவுக் கொண்ட படிக்கட்டுகள் ஒரு கிணறு அமைக்கப்பட்டிருக்கிறது. மன்னரது காலத்தில் இந்தக் கிணற்றில் தினந்தோறும் கங்கை நீர் கொண்டு வந்து சேர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. வெள்ளையர்கள் காலத்தில், பல்வேறு அணைகள் கட்டுமானப் பணிகளுக்காக, இங்கிருந்த மதிற்சுவர்களின் பகுதிகள்  இடிக்கப்பட்டு, கற்கள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

     சிவனாருக்கு, கல்லால் கோவில் எடுப்பித்த மன்னன், தனது மாளிகையை, அவ்வளவு வலிமையாகக் கட்டவில்லை. காலத்தால் அழிந்த அந்த மாளிகைத் தற்போது அகழ்வாராய்ச்சியின் மூலம் சிதிலங்களாக அடையாளம் காணப் பட்டிருக்கிறது.  “சோழப் பேரரசின் ஈடில்லாத் தலைநகராக விளங்கிய எங்கள் ஊர் இன்று, மாவட்டமோ, வட்டமோ, மதுராவோ, பேரூராட்சியோக் கூட இல்லை. ஊராட்சி மட்டுமே. முன்பெல்லாம் ராசேந்திரச் சோழனுக்கும் சதய விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது, ஆனால் ஒரு சமயம் புயல் காரணமாக பந்தல் சரிந்தததால் நின்று போன அவ்விழா அதன் பின் ஏற்பாடு செய்யப்படவே இல்லை” என்றார் ஒரு உள்ளூர்ப் பெரியவர்.

    மாவட்ட நிர்வாகம் ஆலயப் பராமரிப்பில் நல்ல அக்கறை எடுத்துக் கொள்கிறது. சீரானப் புல்தரைகள் ஆலயத்தை அழகாக்குகின்றன. ஆலயம் உள்ளவரை, மன்னரது புகழ் நிலைத்து நிற்கும்.

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :