ஊர்ப் பெயர்கள்



      சில மாதங்கள் முன்பு, நூலக வார விழாவை முன்னிட்டு, ஒரு சொற்பொழிவு ஒன்று பெரம்பலூர் நூலகத்தில் நடை பெற்றது. அங்குப் பேசிய ஒரு பேராசிரியரின் உரையில் இருந்து சில விசயங்கள்...
பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுப் புற ஊர்களின் பழையப் பெயர்களைக் குறித்து பேசினார். சிறுகுடல் மற்றும் பெருகுடல் என்ற ஊர்கள் உண்டு.
உண்மையில் அங்கு இருந்த சிற்றாறுகளின் சங்கமம் காரணமாக, சிறுகூடல் பெருகூடல் என்றப் பெயர்களே மாறி, இப்படி மனித உடல் உறுப்புகள் போல மருவி விட்டது என்றார்.
கருமையான் மண் தன்மையின் காரணமாக, கரும் பாவூர் என்றப் பெயரே மறுவி, அரும்பாவூர் என்றாகி இருக்கிறது. வெண்மையான மண் கொண்ட ஊர், வெண்பாவூர். இதனைக் கேட்டப் பின்புதான் எனக்குத் தெரிந்த்து, கேரளாவில் உள்ள ஒரு ஊரின் பெயர் பெரும்பாவூர். நடிகர் ஜெயராமின் சொந்த ஊராம் அது. அனேகமாக அந்த ஊரின் மண் சற்று பெரியதாக இருந்திருக்குமோ என்னவோ..
  தற்போதைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கிற இடம், முற்காலங்களில், உறையூரிலிருந்து சோழர் படை தஞ்சை செல்லும் வழியில் தங்கும் ராணுவக் கேந்திரமாக இருந்த இடம் எனக் குறிப்பிட்டார். சில தளபதிகள் பெயரினையும் அவர்கள் பெயரில் கண்டெக்கப் பட்ட கல்வெட்டுக்கள், தரும சாசனங்கள் போன்றவற்றை மேற்கோள் காட்டினார்.
பல்வேறு ஊர்களின் பழையப் பெயர்களை பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு விளக்கினார்.
பொம்மனாப்பாடி என்கிற இன்றைய கிராமம் சோழ்ர் காலத்து பெரிய வணிக நகரம் என்று குறிப்பிட்டார்.
பெரும்புலியூர், குரும்புலியூர் போன்ற பெயர்களே மறுவி, பெரம்பலூர், குரும்பலூர் என்றானதாக சொல்லப் படுவது சரியானத் தகவல் அல்ல.
பெரும்பல், குறும்பல் என்கிற தமிழ் வார்த்தைகளே பெரம்பலூர், குறும்பலூர் என்றானது ஆனால் அவற்றின் பொருள் என்ன என்பதை யாரேனும் தமிழ் ஆசிரியர்கள் தான் சொல்ல வேண்டும் என்றார். நமது வரலாற்றினை நாம் மறந்து விடக் கூடாது. நமது பாரம்பரியம் அறுபட்டு விடும். வரலாற்று ஆராய்ச்சி இன்னும் தொடர வேண்டும். வரலாற்றுத் துறை மாணவர்கள் தொடர்ந்து வரலாற்றுத் தகவல்களை வெளிக் கொணர வேண்டும் என்றார். நமதுப் பழம் பெருமைகள் அழிந்து விடக் கூடாது என்று வலியுறுத்திப் பேசினார்.

  தயாராக வந்திருந்தால், இன்னும் பல குறிப்புகள் எடுத்திருக்கலாமே என்றுத் தோன்றியது.




Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :