நகைச்சுவை..


எனது ஆசிரியர் ஒருவர் சொன்ன நகைச்சுவை ஒன்று.
ஒரு ஊரில் சில கொக்குகளும், குளம் ஒன்றில் பல நண்டுகளும் இருந்தனவாம். நண்டுகளுக்கு இந்தக் கொக்குகளிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்றேக் கவலையாம். கொக்குகளுக்கு, கொழு கொழுன்னு இருக்கிற, அத்தனை நண்டுகளையும் ஆசை தீர சாப்பிட வேண்டும் என்று எண்ணமாம்.
 
அதனால் ஒரு சதித் திட்டம் தீட்டியக் கொக்குகள், நண்டுகள் தலைவருக்கு ஒரு தூதுவரை அனுப்பி, நாம் இரு தரப்பும் நண்பர்களாகி விடலாம் நமக்குள் பகை வேண்டாம் என்று சொல்லி அனுப்பினவாம். அதற்கு நண்டுகளும் ஒத்துக் கொண்டனவாம். ஆனால் உள்ளுக்குள் பேசி, அந்த ஒரே நாளில் அத்தனை நண்டுகளையும் தின்று தீர்த்து விட வேண்டும் என்று ரகசியத் திட்டம் போட்டிருந்தனவாம்.
  ஒரு நல்ல நாள் குறித்து அந்த நாளில் மேள, தாளங்களுடன் நண்பர்களாகி விடுவது என்று கொக்குகள் எல்லாம் கிளம்பி போச்சுங்களாம்.
ஆனால், கதையில் முக்கியத் திருப்பமா, அந்தக் கொக்குங்களோட சதித் திட்டம் நண்டுகளுக்குத் தெரிஞ்சுருச்சாம்.  அங்க இருந்த எல்லா நண்டுகளும் வேறு ஒரு இடத்துக்குக் கிளம்பிப் போயிடுச்சிங்களாம். கொக்குங்களுக்கு ஒரே ஏமாற்றமா இருந்துச்சாம். என்னடா இது எப்புடி இந்த முட்டாள் நண்டுகளுக்கு நம்மத் திட்டம் தெரிஞ்சதுன்னு முழிச்சுதுங்களாம்..

  அந்த நண்டுங்களுக்கு எப்படி தெரிஞ்சுதாம் தெரியுமா?

இந்தக் கொக்குங்க எல்லாம் மேளம் அடிச்சுட்டு வந்ததுங்க இல்லையா? அந்த மேள சத்தம் கொக்குங்களுக்கு இப்புடி கேட்டுச்சாம்.
“ நண்டமுக்குக் கைக்கு ரெண்டமுக்கு, நண்டமுக்குக் கைக்கு ரெண்டமுக்கு”-ன்னுக் கேட்டுச்சாம்.


Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :