சமூக மாற்றங்கள் .....


     தலைமுறை மாற்றம் (இடைவெளி என்றும் கூறுவதுண்டு) என்பது, ஒரு தலைமுறையில் வாழ்ந்த மக்களுக்கும், அவர்களுக்குப் பின்வருகிற (ஒரு 20-30 வயது இளைய) மக்களுக்கும் உள்ளப் பழக்க வழக்க மாறுபாடுகளைக் குறிக்கும்.
தற்போதைய சூழ்நிலையில் இந்த கால இடைவெளியின் அளவுக் குறைந்து விட்டது. 5 லிருந்து 10 ஆண்டுகள் இளையவரிடமே இந்த தலைமுறை மாற்றத்தைக் காண முடிகிறது.

1.       எங்களது கிராமங்களில், 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அருகிலுள்ள நகரத்திற்கு செல்ல, காலை 7.45 ற்கு வரும் தனியார் பேருந்தைத் தவற விட்டால், அடுத்து எத்தனைப் பேருந்துகள் வந்தாலும், நாம் படியை விட்டு மேலே ஏற இடம் இருக்காது (ஒருவேளைப் பேருந்தை பயணிகளுக்காக நிறுத்தினால்). ஆனால் சிற்றுந்து (mini bus)   வந்தப் பின், அந்தப் பிரச்சினை குறைந்தது. யாரும் பேருந்தின் கூரை மீது ஏறுவது இல்லை என்றானது. அந்த நிலை இன்னும் முன்னேறி.., தற்போது பொதுப் போக்குவரத்தையேப் பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை என்றாகி விட்டது.

2.       ஒருவர் வீட்டில் தொலைப்பேசி வைத்திருக்கிறார்கள் அல்லது, TV Antenna  இருக்கிறது என்று சொன்னால், அவர்களது வீட்டில் யாராவது வெளிநாடு சென்று வந்தவராகவோ அல்லது, அரசாங்க உத்தியோகம் பார்ப்பவராகவோ இருப்பார். தற்போது அலைப்பேசிகள் (cell phones) சந்தையில் கூறு கட்டி விற்காத குறை. தொலைக்காட்சிப் பெட்டிகளும் அப்படித்தான்.

3.       ஒரு பட்டப் படிப்பு முடிப்பதே பெரிய கவுரவமாகவும், பணம் ஈட்டித் தரும் விசயமாகவும் இருந்தது. தெருவில் 15 மாணவர்கள் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தால் 2 பேர்தான் மேனிலைக் கல்வியை வெற்றிகரமாக முடிப்பார். தற்போது பொறியியல் பட்டதாரிகளே (நிறைய).., வேலை கிடைக்காமல் கிராமங்களில் சுற்றி வருகிறார்கள்.

4.       ஆல்கஹால் புழக்கம்.., மிகவும் குறைவாக இருந்தது. மதுவை அருந்தி மயங்கிக் கிடப்பவர்கள், விலங்குகளைப் போல நடத்தப் பட்டார்கள். மரியாதையே இருக்காது. மதுபானக் கடைகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். தற்போது, மது அருந்துவதுதான் நட்புக்குத் தரும் மரியாதை என, நாகரிகம் புதியப் பரிணாமம் அடைந்து விட்டது.

5.       சம்பாத்தியம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, முதுகலை பட்டதாரிகளுக்கே மிகவும் குறைவான வருமானம்தான் கிடைக்கும். தற்போது சற்றுத் திறமையானவராக (skilled) இருந்தால் இளங்கலைப் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் (diploma) கூட நல்ல வருமானம் பெற முடிகிறது. (வாய்ப்புகள் உள்ளது). முற்காலங்களில் சாத்தியக் கூறுகள் குறைவு.

6.       முந்தையத் தலைமுறயில், ஒருவர் ஒரு நிறுவனத்தில் அல்லது, ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தால், ஓய்வுப் பெறும் வரை அந்த வேலைதான். ஆனால் தற்போது.., நமதுப் பணித் திறமையை அதிகரித்துக் கொள்ளவும், வருமானத்தை உயர்த்திக் கொள்ளவும் நிறைய மாற்றம் செய்கிறோம். 10 ஆண்டுகள் அனுபவத்தில், 10 நிறுவனங்கள் மாறிய நண்பர்கள் உண்டு.


மாற்றங்கள் அவசியத் தேவை. சர்வதேச சமுதாயம் எவ்வாறு மாறுகிறதோ.., அவ்வாறு நாமும் மாறிக் கொண்டே இருந்தாக வேண்டும். அல்லது எவ்வாறான மாறுபட்ட உலகில் நாம் வசிக்கிறோம் என்பதையாவதுத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இல்லை,  நாம் மாற்றங்கள் வேண்டாம், பழைய வாழ்க்கை முறைகளிலேயே வாழ்வோம் என்றால்..,  நமது முன்னோர்கள் செய்த அதேத் தவறையே நாமும் திரும்பிச் செய்து கொண்டிருப்போம். பின்னர் வேறு எதாவது நாடு, நமது நாட்டை அடிமையாக்கியோ அல்லது வணிகச் சந்தை ஆக்கியோ வைத்திருப்பார்கள்.

    அதே சமயம், நாம் நமக்கு சவுகரியமான மாற்றங்களை மட்டும் வைத்துக் கொண்டு, சவுகரியம் அல்லாத மாற்றங்களை விட்டு விடுகிறோம். அப்படி இல்லாமல், நமது பாரம்பரியங்களில் உள்ள நல்ல விசயங்களை விட்டு விடாமல், மற்ற நாடுகளின் நல்ல பழக்கங்களை மட்டும் நம்முடன் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

  உதாரணமாக, நடை, உடை, பாவணை, உணவுப் பழக்கங்கள்.., வாழ்க்கை முறைகள் போன்றவற்றில் அப்படியே மேற்கத்தியக் கலாச்சாரத்தை பிரதிபலிக்காமல், அங்கு உள்ள நல்ல விசயங்களான, நேரம் தவறாமை, எளியவரை மதித்தல், பாகுபாடு பார்க்காமை, பழமையைப் பாதுகாத்தல், கல்வியளித்தின் தரம் போன்ற விசயங்களை எடுத்துக் கொண்டு, நமது குணங்களான.., பெரியவர்களை மதித்தல், கண்ணியமாக உடை அணிதல்,  பெற்றோரைப் பேணுதல், வாழ்க்கைத் துணைவரை நேசித்தல்(வாழ் நாள் முழுவதும்), எல்லா உயிர்களையும் காத்தல் போன்றவற்றை மேம்படுத்தி சிறப்பானதொரு சமுதாயமாக உருவாக்கலாம். 

   

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :