ஆம் ஆத்மிக் கட்சி (AAM AADMI PARTY)

ஆம் ஆத்மிக் கட்சி (AAM AADMI PARTY)


  டெல்லித் தேர்தலுக்கு முன்பு எழுத வேண்டும் எனத் திட்டமிட்டப் பதிவு இது. ஆனால் AAP- ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கான வெற்றியைத் தனது முதல் தேர்தலிலேயேப் பெற்று விட்டப் பிறகுதான் எழுதுவதற்கு நேரம் அமைந்தது. புகழ் பாடும் கட்டுரை எனக் கொண்டாலும் நல்லதுதான்.

  நல்லது செய்ய வேண்டும் என யார் வந்தாலும் அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். இந்திய வருவாய் பணியில், கவுரவம் மிக்க ஒருப் பொறுப்பில் இருந்த ஒருவர் தனது பதவியத் துறந்து விட்டு, இந்தியாவிற்கு நல்லது செய்தேத் தீருவேன் அன்றுக் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்து இருக்கிறார். இவர் சினிமா நடிகர் அல்ல. பெரிய அரசியல் குடும்பத்தின் செல்ல வாரிசும் அல்ல.

      முதல் தேர்தலிலேயே 28 இடங்களைக் கைப்பற்றுவது என்பது சாதாரணமானது அல்ல. அதுவும் தலைநகரில், பெரும் புள்ளிகளை எதிர்த்து. இந்த 28 இடங்கள் வென்றதால், அவரைத் தங்களது ஆட்சிக்கு ஆதரவளிக்க வைக்க பெரியக் கட்சிகளில் இருந்து எத்தனைக் கோடிக்குப் பேரம் (குதிரைப் பேரம்) பேசப் படும் என்கிற சங்கதிகள் எல்லாம் நமக்கு பரிச்சயமானவையே...!!


      ஆனால் இவரைப் புகழ்வதற்கானக் காரணங்கள் இன்னும் இருக்கின்றன.முன்னணி கல்வி  நிறுவனமான  IIT Kharagpur ல்  பொறியியல் பட்டம் பெற்று இந்தியாவின் முன்னனி நிறுவனத்தில் கை நிறைய சம்பளங்களுடன் பணியாற்றிய ஒருவர், அதனைத் துறந்து விட்டு, தேச சேவையைத் தேர்ந்தெடுத்ததும் சரி...,
அந்தப் பணியையும் துறந்து விட்டு, பெரியப் பெரிய மனிதர்களேப் பயப்படும் விசயமான, அரசியல் கட்சியை ஆரம்பித்து, அதனை தனது ஆதரவாளர்களுடன் செவ்வனே நடத்திச் செல்வதும் மிகுந்த பாராட்டுக்கு உரியவை.

  இந்தியன் திரைப்படத்தில், அப்பாக் கமல் ஒரு லஞ்ச அதிகாரியைக் கொல்வதற்கு ஒரு கிட்டங்கிக்கு சென்றிருப்பார். அங்கு ஒரு துடைப்பம் எடுத்து, பெருக்கிக் கொண்டிருப்பார். அப்போது அங்கே வரும் அந்த லஞ்ச அதிகாரி, யார் நீ? இங்கு என்ன செய்கிறாய் என்பார்.. அதற்குக் கமல் இங்குள்ள அசுத்தங்களை சுத்தம் செய்கிறேன் என்பதாகச் சொல்லுவார். அந்த காட்சியின் தாக்கத்தினாலோ என்னவோ.., இந்தக் கட்சிக்கு சின்னமாக ஒரு துடைப்பத்தை வைத்து இருக்கிறார்கள். அதுவும் பழையத் தேய்ந்தத் துடைப்பம். இந்த சின்னத்திற்காகவே இவர்களை ஆதரிக்கலாம்.



  ஆனால் இவர்களின் வெற்றிக்கு, முக நூலும்(Facebook), ட்விட்டரும்(Twitter) ஒரு முக்கியக் காரணம் எனலாம். ஏனென்றால், எந்தப் பெரிய மெனக்கெடலும், பணச் செலவும் இல்லாமல் மக்களிடையேத் த்கவல் விரைவாகப் பரவ உதவி செய்தன இந்த ஊடகங்கள். இவை மட்டும் இல்லாது இருந்திருந்தால், நாம் ஆளும் கட்சியின் ஆதரவு ஊடகங்களும், எதிர்க் கட்சியின் ஆதரவு ஊடகங்களும் தங்களது ‘சேர்த்தாளி’ களுக்காக ஒத்து ஊதுவதையேப் பார்த்து பார்த்து, மூளைச் சலவை செய்யப் பட்டிருப்போம்.



   இந்தக் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவர், தனது ராணுவப் பணியை உதறி விட்டு, டெல்லி தேர்தலில் நின்றார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. தான் மும்பைத் தாக்குதலில் எவ்வாறு தாக்கப்பட்டேன், தனக்கான நிவாரணம் ஏன் சரிவரக் கிடைக்க வில்லை என்கிற விசயங்களை அவர் வீடு வீடாக சென்று விவரித்துக் கொண்டிருந்தார். இந்தக் கட்சியின் போற்றுதலுக்கு உரிய ஒரு விசயம் என்னவெனில், தனக்கு யாரெல்லாம் நிதி உதவி அளிக்கிறார்கள், எவ்வளவுத் தருகிறார்கள் என்பனவற்றைத் தனது கட்சியின் அதிகாரப் பூர்வ இணையப் பக்கத்திலேயே வெளியிடுகிறார்கள் என்பதுதான்.

   ஆனால் மற்றக் கட்சிகள் தங்களது பணத்துக்கு மூலாதாரம் சொல்ல நேர்ந்தால்., முதலுக்கே மோசமாகிக் குட்டு வெளிப்பட்டு விடும். அனைத்துப் பண முதலைகளும் சிக்கலில் சிக்குவர். முந்தைய ஆட்சியில் ஊழல் செய்து கள்ளத் தனமாகப் பதுக்கிய பணத்தைத் தற்போதையத் தேர்தலில் செலவிட முடியாது. போலிக் கட்சிகளை ஆரம்பித்து, அங்கீகாரம் பெற்று, அவற்றின் மீதுத் தங்களதுப் பணத்தைக் காண்பிக்க முடியாது.

      டெல்லித் தேர்தலின் போதுத் தங்களுக்கு, தேர்தல் பிரச்சாரத்திற்காக சில மடிக் கணினிகள் (Laptops) (பயன்படுத்திய, பழைய) தேவை யாரும் தானம் தர விரும்புவோர் எங்களை அவசரமாகத் தொடர்பு கொள்ளவும் என்று ஆம் ஆத்மிக் கட்சி தெரிவித்து இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. இந்தக் கட்சியின் வேட்பாளர்கள் பலரும் கோடீஸ்வரர்கள் என்கிற வாதம் மக்களிடம் எடுபட வில்லை. ஏனெனில், நாட்டின் தலை நகரமான டெல்லியில் ஒரு சொந்த வீடு இருந்தாலே அதன் மதிப்புக் கோடியை நெருங்கும் என்பது, சென்னையின் புற நகரில், வீடு வாங்க முயற்சித்து விலை கேட்டவர்களுக்குத் தெரியும்.
     
     அடுத்ததாக, மும்பை மற்றும் ஹரியானாவில் தேர்தலில் களம் இறங்க உள்ளதாக திட்டமிட்டு வருகிறார்கள். அப்படியே நம்ம ஊருப் பக்கம் வந்தால் நல்லது. நமது வோட்டுக்கு ஒரு மரியாதை கிடைக்கும். ஆட்சி அமைய உதவுகிறோம் என்று மற்ற கட்சிகளுடன் சேர்ந்து இருக்கும் நற்பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில் இப்போதைக்கு நல்லத் தலைமை இல்லாது இருளில் தவிக்கும் நமக்குத் ‘தூரத்தில் தெரியும் வெளிச்சம்’ போன்றவர்கள் இவர்கள். இவர்களும் தோல்வி அடைகின்ற பட்சத்தில் நாட்டின் தலை விதி இன்னும் மோசமாகி விடும்.

 சாமானியர்களின் கட்சி எனப் பொருள் படும் பெயரமைந்த இந்தக் கட்சி மேலும் வளர, இந்தியாவை வளர வைக்க, இந்தியர்களுக்கு உலகளவில் நல்ல மதிப்பை ஏற்படுத்தித் தர, சாமானியர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.


Comments

  1. Let us Support AAP. It is our party the common man`s

    ReplyDelete
    Replies
    1. Surely, We need to support him..!! If he fails, many patriotic peoples morale will be spoiled..!!

      thanks..!!

      Delete

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :