நாகரீகக் கோமாளி.

நாகரீக கோமாளி

   ஜோக்கர் என்னும் பெயரில் ஒரு நல்ல திரைப்படம் வந்தது. நேர்மையாக அரசாங்கம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கோமாளிகள் என்பதாக காண்பித்திருந்த நல்ல ப(பா)டம் அது.

           - சமீபத்தில் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் செய்தோம். விண்ணப்பக் கட்டணம் 300 ரூ தாண்டாது. ஆனால், 760 ரூ வாங்கினார்கள். அதற்கு, ஒரு 3 செ மீ துண்டு காகிதத்தில் கையால் எழுதி பதிவெண் கொடுக்கிறார்கள். 

           - குடி நீர் இணைப்பு வேண்டி, நகராட்சியில் மனு செய்த போதும் இதே நிலை. 3500 ரூ மட்டுமே வைப்புத்தொகை. 2000 ரூ சாலையை மீண்டும் செப்பனிடுவதற்கு என மொத்தம் 5500 ரூ மட்டுமேப் பெற வேண்டும். ஆனால், ரசீது தராமல் 12000 ரூ பெற்றுக் கொண்டும் கூட, குழாய் பதித்தப் பிறகு சாலையை தார் ஊற்றி மூட வில்லை. மண்ணை மட்டும் தள்ளி விட்டு சென்று விட்டார்கள்.

            -  நண்பர்களாக இருந்தவர்கள், அரசாங்க வேலையில் சேர்ந்து விட்டால், அவர்கள் நமது நண்பர்கள் கிடையாது. அதிகாரிகள் மட்டுமே. 6 லிருந்து 12 ம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படித்த வகுப்புத் தோழர் (நண்பர் இல்லை) ஒருவரிடம் ( நில அளவர்), பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்த போது, வீட்டுக்கு வந்தார். குளிர்பானம் கொடுத்தால் அருந்த வில்லை. உடனே முடித்துத் தருகிறேன் என்றார். நண்பர் இவ்வளவு நல்லவரா?!! பரவாயில்லை என்று நினைத்தோம். ஆனால், 6 மாதங்களாக பட்டா வரவே இல்லை. 4 நில அளவர்கள் சேர்ந்து மாத சம்பளம் கொடுத்து ஒரு தரகர் அமர்த்தி இருக்கிறார்கள். 1500 ரூ தந்து பார்த்தும் நடக்க வில்லை. பட்டா மாற்றத்திற்கு சராசரியாக 5000 ரூ லஞ்சம் தர வேண்டும்.



                - தெரிந்தவர் ஒருவர் மீது காவல்துறை விசாரணை ஒன்று வந்தது. அதற்காக, அவர் தனது பழைய நண்பர், தனது ஊரில் தற்போது காவல்துறையில் பணி புரிகிறார் என்பதைக் கேள்விப்பட்டு, தன் மீதான விசாரணை முறையாக நடக்க உதவி செய்யக் கோரியிருக்கிறார். அதற்கு அவரோ, “ மனைவி பிறரிடம் தொடர்பில் இருப்பதை எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள், உங்களைப் போலவே மற்றவரும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு, நீங்கள் ரூ2000 அல்லது 5000 பணம் காவல் நிலையத்திற்கு கட்ட வேண்டியது இருக்கும், வேறு வழியில்லை, பெரிது படுத்தினால் இப்படித்தான்”..,, என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்.

அரசு அதிகாரிகளிடமோ, அரசியல்வாதிகளிடமோ நேர்மை என்று சொன்னால், நாம் நிச்சயம் கோமாளிகளே..

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :