நாணயம் ஆனவர்கள்

Tநாணயமானவர்கள்.
     நண்பர் ஒருவர், தன்னிடம் Debit card  இல்லை என்றும், விமானப் பயணச் சிட்டு ஒன்றை முன்பதிவு செய்து தருமாறும் வேண்டினார். 10000 ரூ டிக்கட் பதிவு செய்து தந்த பிறகு பயணம் செய்தார். பணம் கேட்க வேண்டாம் அவரே தருவார் என்று காத்திருந்தோம், கேட்பது நாகரிகம் அல்ல என்பதால். சில மாதங்கள் கழித்து வேறு வழியில்லாமல் கேட்ட போது அவர் சொன்ன பதில் “நான் அப்போதே கொடுத்து விட்டேனே”…!!!.



     உறவினர் ஒருவர்….. நமக்கு ஆபத்து என்றால், வேடிக்கை பார்ப்பவர். தனக்கு ஆபத்து என்றால், நாம் ஓடோடி சென்று உதவ வில்லை என்பார். நிறைய கடன் வாங்கி சிக்கலில் இருந்தார். நம்மால் முடிந்தது என்று, ஒரு தொகையை தந்து உதவினோம். அதை திருப்பித் தர முடியாது, தரவும் மாட்டார் என்பது நன்றாகவேத் தெரியும். சில ஆண்டுகள் கழித்து, அதைப் போல 3 மடங்கு தொகையைக் கேட்டார். உடனேத் தந்து விடுவேன் என்றார். தற்சமயம் கையில் பணம் இல்லை என்றோம். அவருக்கு அதிக கோபம் வந்து விட்டது. “நான் கேட்டு பணம் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?” என்றார். நொந்து போனோம்.


     அண்டை வீட்டில், தனது பாட்டியை வேலைக்கு செல்லும் பேத்தி அடித்து விட்டார். காரணம், பாட்டி கரண்ட் பில் கட்ட செல்ல விரும்ப வில்லை. மின்சார அலுவலகத்திற்கு ஒரு 4 கி மீ செல்ல வேண்டும். கோபித்துக் கொண்டு அவர் சில வாரம் வெளியூர் சென்று விட்டு திரும்பி வந்தார். எங்களிடம் கொடுங்கள் இன்டெர்னெட் மூலம் கட்டித் தருகிறோம் என்றோம். அட்டை எண்ணை கொடுத்தார், மின்சாரக் கட்டணம் 640 ரூ கட்டி விட்டு அவரிடம் தெரிவித்தோம். 500 ரூ கொடுத்து விட்டு, அவர் இப்படிச் சொன்னார் “எப்படி? எங்களுக்கு எப்பவுமே இவ்வளவு பில் வராது”. மின் கட்டன ரசீது அச்சிட, மேலும் minimum balance பராமரிப்புக்காக வங்கியில் மீண்டும் பணத்தை செலுத்த என்று நமக்குத்தான் வீண் வேலைகள் வந்தது.




இப்போதுதான் புரிகிறது, நகரங்களில் வசிப்பவர்கள் ஏன் மற்றவர்க்கு உதவி செய்ய விரும்புவது இல்லை என்று. 

Comments

  1. வணக்கம் ...ரொம்ப சரி நிறைய இப்படித்தான் சொன்னால் தீராது சொல்லவும் முடியாது

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக நிறைய பேர் இப்படி இருக்கிறார்கள். நன்றி.

      Delete

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :