கோசெங்கோட் சோழர்

கோச்செங்கண்ண சோழன்

         திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரர் ஆலயத்தை கட்டிய மன்னர் செங்கண்ண சோழன். 63 நாயன்மார்களுள் ஒருவர். சிவகணமான இவர், முற்பிறவியில் சிலந்தியாக இருந்து, தான் வலை பின்னிப் பாதுகாத்துக் கொண்டிருந்த சிவலிங்கத்தை நீரால் தினமும் அபிஷேகம் செய்து வலையை அழித்த யானையைத் துதிக்கையினுள் புகுந்து கொன்றார். பின்னர் மறுபிறவியில் மன்னனாகப் பிறந்து சங்க காலச் சோழர் ஆனார். முற்பிறவியைப் பற்றி உணர்ந்து அதனாலேயே, திருவானைக்காவல் ஆலயத்தினுள் மூலவரை குட்டி யானை கூட நெருங்க முடியாதவாறு ஆலயம் எழுப்பி இருக்கிறார்.




         இவர், தான் எதிர் கொண்ட போர்களில் தோல்வியே காணாதவர். கணைக்கால் இரும்பொறை என்னும் சேர மன்னருடன், கழுமலம் போரில் வெற்றி பெற்று அவரை சிறையில் அடைத்தார். அதன் பின்னர் புலவர் பொய்கையார் மூலம் இரும்பொறைத் தமிழை போற்றுபவர் என்பதை அறிந்து, அவரை விடுவிக்க சிறைச்சாலை சென்ற போது, சேரமான் கணைக்கால் இரும்பொறை தன்னை அலட்சியம் செய்த சோழ நாட்டுக் காவலர்கள் தந்த நீரை அருந்த மறுத்து, புறநானூற்று செய்யுள் ஒன்றை எழுதி வைத்து விட்டு உயிர் துறந்திருந்தார்.

        கோசெங்கண்ணர் பிறக்கையில், சோழ அரசியான இவரது தாயார் தனது மகன் சிறந்த அரசனாக வேண்டும் என்பதற்காக, இவரது பிறப்பை சிறிது நேரம் தள்ளி வைக்க எண்ணி, தன்னை சிறிது நேரத்திற்குத் தலைகீழாகக் கட்டி விடுமாறு செய்தார். ஆகவே கண்கள் சிவந்து பிறந்த இவரை, சிவந்த கண் கொண்ட அரசனோ? எனும் பெயர் கொள்ளும் படி, ‘கோ-செங்கண்ணணோ’? என்று அழைத்துவிட்டு மரணம் அடைந்தார் என்று தெரியவருகிறது.

       போர்க்களங்களில் ‘யானைகள் உயிருள்ள டாங்கிகள்’ என்று வர்ணிக்கப் படுவது உண்டு. சேர மன்னருடன் இவர் புரிந்த போரில், சேரனின் யானைப் படையை வீழ்த்த சோழர் படை பெரும் பாடுபட்டது என்று படித்ததுண்டு. யானைகளைப் போரில் பயன்படுத்த ஆரம்பித்திருந்த காலம் அது. அம்புகளால் கொல்ல முடியாத யானையை அழிக்க, ஈட்டிகளை பயன்படுத்தியும், உயிருக்கு அஞ்சாமல் அருகில் சென்று துதிக்கைகளை வெட்டியும் வீழ்த்தி, தங்கள் மன்னரை வெற்றி பெறச் செய்தனர் சோழ நாட்டு வீரர்கள்.

        பிற்காலத்தில் (6-ம் நூற்றாண்டில் யானைகளின் கையில் உலக்கையை கொடுத்து, இடிக்கப் பயிற்சி அளித்து, வாதாபி நகர கோட்டையை தகர்த்து வெற்றி கொண்ட மாமல்ல நரசிம்ம பல்லவனின் தளபதி சிறுத்தொண்ட நாயனார் ஆவார்.



       கோசெங்கண்ண சோழர் என்ற பெயரில் வெவ்வேறு காலங்களில், பல மன்னர்கள் வாழ்ந்திருக்கலாம் என்றும் கருதப் படுகிறது. ஈசனுக்கு பல மாடங்களை கொண்ட நிறைய ஆலயங்களை எழுப்பிய மன்னரே, 63 நாயன்மார்களுள் ஒருவராவார்.

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :