சோழகங்கம் எனப்படும் பொன்னேரி.

சோழ கங்கம்  எனப்படும் பொன்னேரி

       தஞ்சாவூரில் இருந்து, மாமன்னர் ராஜேந்திர சோழன் தலைநகரை, கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். படைகள் நகர்ந்து செல்லும்போது, தஞ்சையின் வயல்கள் அழிந்து போவதும், எதிரிகளின் கடற் படை தஞ்சையை எளிதில்  நெருங்க முடியும் என்பதும் காரணமாகக் கருதப் படுகிறது.





         அரியலூர் பகுதியில் விவசாயம் செய்யப் படாமல், கொள்ளிடம் நதியால் மூன்று புற்மும் சூழப்பட்டு வெறுமனாக கிடந்த இந்தப் பகுதி, பெரிய தலை நகரத்திற்கு ஏற்றது என்று அவர் எண்ணியதே இதற்குக் காரணம். ஒரு புறம் மட்டும் பாதுகாப்பு இன்றி இருப்பதை கவனித்த அரசர், பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்பதற்காக கொள்ளிடம் நீரைத் தேக்கி வைத்து பயன்படுத்த ஏற்படுத்தியதே சோழகங்கம் ஏரி.


         கப்பற் படை வலிமையின் மூலம் உலகை வென்ற அங்கிலேயர்கள், ஒரு தமிழ் மன்னன் 800 ஆண்டுகளுக்கு முன்பே தனது கப்பற் படை மூலம், தெற்கு ஆசியா முழவதும் கோலோச்சி இருக்கிறார் என்பதை அறிந்தார்கள். இதன் புகழைக் குலைப்பதர்காகவே, அப்போது, இந்த எரியின் நடுவே செல்லும் படி கும்பகோணம் நெடுஞ்சாலையை அமைத்தார்கள் என்று சொல்லப் படுகிறது. அதன் புகைப்படங்கள் இங்கே..










ஆங்கிலேயர்கள் செய்த அனைத்து வளர்ச்சிப் பணிகளிலும் தன்னலம் இருந்தது என்பதுதான் எல்லோருக்கும் தெரியுமே…!!

           அண்மையில் இங்கு குடமுழுக்கு நடந்த போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும் தங்களை சோழர்களின் சந்ததி என்று விளம்பரம் செய்து அறிக்கை ஒட்டியிருந்தார்கள். சிலர் இன்னும் மேலே போய், பிரதமர் மோடி ஒருபுறமும், தான் ஒரு புறமும் சமமாக நிற்கும்படி சில பதாகைகள் அமைத்து இருந்தார்கள். அமைதிப்படை திரைப்படம் நினைவுக்கு வந்தது. நகைச்சுவையாக இருந்தது.

Comments

  1. வரலாறு விவரத்திற்கு நன்றி... தமிழன்டா அப்படினு இருக்கு சூப்பர் இன்று ஆங்கிலேயன் எல்லாம் வரணும் அவசியமில்லை கொள்ளிக்கட்டைகள் இங்கேயே இருக்கு

    ReplyDelete
  2. நமது தமிழ் வேந்தர்கள் புகழ் எவ்வளவோ அழிந்து போய்விட்டன. அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்துள்ள 1000 ஆண்டு பழமையான செங்கல்லின் அகலத்திற்கே, நம் தற்கால அரசுகள் நிகராகாது. தங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :